கோலி-அனுஷ்கா வரவேற்ப்பு ஸ்பெசல் : மோடி, ஜெட்லி வருகை : கோலி செம டான்ஸ்

Default Image

இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் அவர்கள் நெருங்கிய சொந்தபந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் வரவேற்ப்பு நிகழ்ச்சி இந்தியாவில், மும்பையில் தாஜ் பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடிகர் நடிகைகள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், கிரிக்கெட் வீரர்கள், ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா, கவுதம் காம்பீர் ஆகியோரும், தம்பதிகளை வாழ்த்தினர்.

விராட் மற்றும் அனுஷ்கா அணிந்து வந்த ஆடையானது, ஆடை வடிவமைப்பாளர்  சபரேசாசி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆடைகள் பார்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

கொண்டாட்டத்தின் போது தம்பதிகள் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து பஞ்சாபி பாடலுக்கு அசத்தலாக நடனமாடினர். பஞ்சாபி பாடலுக்கு தேர்ந்த ஒரு நடன கலைஞரை போலவே கோலியும் ஆடி அசத்தினார்.நடிகை அனுஷ்காவுக்கு நடனம் ஆடியது பெரிய விஷயம் இல்லை. ஆனால்  கிரிகெட்டர் கோலிக்குள் இவ்வளவு அழகாக நடனம் ஆடுவாரா என  விருந்தினர்கள் வியக்கும் அளவுக்கு நடனம் ஆடினார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்