கோலியின் சவாலை ஏற்றார்..பிரதமர் மோடி..!!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்துள்ள உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இடைவிடாது புஷ் அப்கள் செய்த வீடியோவை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விராட் கோலி, ஹிருத்திக் ரோசன், சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுத்தார். இதை அடுத்து தனது உடற்பயிற்சி காட்சிகளை வெளியிட்டார் விராட் கோலி.
பிரதமர் மோடி, தோனி, தமது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு பதில் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமது உடல் திறனை நிரூபிக்கும் உடற்பயிற்சி காட்சிகளை விரைவில் பகிர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்