கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் 2 பேர் பலி – சமூக வலைத்தள வதந்தியால் விபரதம்..!

Default Image

மராட்டிய மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள சந்த்காவன் கிராமத்தில் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் விடிய, விடிய காவல் காத்தனர்.

இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அதிகாலையில் 9 பேர் அந்த கிராமத்தில் உள்ள பண்ணைக்கு வந்தனர். அவர்களை கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளால் தாக்கினர். இதில் 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 2 பேர் அடுத்த நாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த கொடூர சம்பவம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கானாவிலும் இதேபோல் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர். அசாமில் குழந்தை கடத்தல் பீதியில் கிராம மக்களால் 2 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்