கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்து நிர்மலாசீதாராமன் ஆறுதல்..!
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் ஆறுதல் கூறினார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சமீரை சுட்டுக் கொன்ற இந்திய ராணுவ மேஜர் ரோஹித் சுக்லா குழுவைச் சேர்ந்தவர் அவுரங்கசீப். அவர் ரமலானை முன்னிட்டு ஷோஃபியான் ராணுவ முகாமில் இருந்து சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.