கொடூர கொலைகாரனாக மாறிய 91 வயது தாத்தா..!!
திருச்சூர்,
கேரளாவின் திருச்சூரில் வெள்ளிகுளங்கரா பகுதியை சேர்ந்தவர் செரியா குட்டி (வயது 91). இவரது மனைவி கொச்சுதிரேசியா (வயது 87). இந்த தம்பதிக்கு இவர்களுக்கு 7 குழந்தைகள் அவர்கள் அனைவருக்கும் திருமணம் விட்ட்து. எனவே இவர்கள் வெள்ளிகுளங்கரா பகுதியில் தனியே வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 27ந்தேதியில் கொச்சுதிரேசியா காணாமல் போயுள்ளார்.காணாமல் போன கொச்சுதிரேசியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனவே அவரது மகன் ஜோபி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
போலீசார் காணாமல் போன கொச்சுதிரேசியாவை பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது போலீசாரின் விசாரணையில், இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர் என்று தெரிய வந்தது.அப்போது போலீசார் மனைவி காணாமல் போனது பற்றி செரியா குட்டியிடம் விசாரணை நடத்தியனர்.
அப்போது செரியா குட்டி முன்னுக்கு பின்னும் பதிலளித்தார் எனவே சந்தேகம் அடைந்த போலீசார் செரியா குட்டியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது குடும்ப சண்டை கொலையில் முடிந்துள்ளது என தெரிய வந்துள்ளது.மனைவியை கொலை செய்து உடலை எரித்து உள்ளார் என்று போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
91 வயதான முதியவர் இப்படி கொடூரமாக நடந்து கொண்டு ,அதுவும் மனைவியையே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.தற்போது செரியா குட்டி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்…
DINASUVADU