ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விவகாரம் மேலும் இருநாடுகள் இடையிலான பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இதனையடுத்து சர்வதேச எல்லை மற்றும் எல்லைப் பாதுகாப்பு கோடு பகுதியில் பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர குமாரின் உடலில் மூன்று இடங்களில் குண்டுகாயம் உள்ளது என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.
ராணுவ வீரர் நரேந்திர குமார் மாயமானதை தேடும் பணியை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அவருடைய சடலத்தை மீட்டுள்ளது. ராணுவ வீரரின் மார்பு பகுதி, கால் பகுதியில் குண்டு காயம் உள்ளது. அவருடைய கழுத்து பாதி அறுப்பட்ட நிலையில் இருந்துள்ளது, அவருடைய உடல் முழுவதும் கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் உள்ளது. பாகிஸ்தானின் இந்த அடாவடியான செயலுக்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…