ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என நம்புவதாக, கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். இந்த கொடூரமான நிகழ்வு, ஊடகங்கள் மூலம் தெரியவந்ததாக கூறியுள்ள அவர், இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க, சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 8 வயது சிறுமியின் கொடூர கொலைக்கு உரிய நீதியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும் கிடைக்க வேண்டும் என்றும் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…