தமிழகத்திலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சென்னை பக்தர்கள் 19 பேர் சிக்கி உள்ளனர்.மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை சென்ற 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியானது.
பின்னர் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது .மீட்புப் பணிக்கு நேபாள அரசிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டது .
இந்தியர்கள் மீட்பு பணி தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பாக இருக்கும் இந்தியர்களுக்கு உணவு வழங்க இந்திய பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
தற்போது நேபாளம் சிமிகாட் நகரில் இருக்கும் தமிழக பயணிகளை வர்த்தக விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கியது. இந்திய அரசின் முயற்சியால் வர்த்தக விமானங்களை சிமிகோட்டுக்கு அனுப்பியது நேபாள அரசு.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…