Categories: இந்தியா

கேரள போலீசுக்கு எச்சரிக்கை….கோர்ட் அதிரடி…!!

Published by
Dinasuvadu desk
கேரளாவில் உள்ள சபரிமலையில் அய்யப்ப பக்தர்களிடம் கேரள போலீஸ் கடும் கெடுபிடிகள்  செய்ததாக கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் , RSS , BJP போராட்டம் நடத்தி கேரள ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வன்முறையை ஏற்படுத்தினர்.இதனால் தற்போது பகதர்கள் பாதுகாப்பிற்க்காக கேரள காவல்துறை கடுமையான கெடுபிடியில் செய்து வருகிறது. பக்தர்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட BJP , RSS வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு, கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதியிடம்  144 தடை உத்தரவை மீறியதால், போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.ஆனால் நீதிபதிகள், போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
cgfhvtn8அப்போது நீதிபதிகள் எந்த அதிகாரத்தின் கீழ், பக்தர்கள் சன்னிதானத்துக்குள் நுழைவதை போலீஸ் தடுக்கிறது? தரையில் தண்ணீரை ஊற்றி பக்தர்களுக்கு இடையூறு செய்யுமாறு யார் சொன்னது? இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார்.அதோடு மட்டுமில்லாமல் சபரிமலையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பட்டியலையும், அவர்களின் செயலையும் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் விவரத்தை டி.ஜி.பி. தெரிவிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. உண்மையான பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும்.என்று கூறி அடுத்தகட்ட விசாரணை, 23-ந் தேதி ஒத்திவைப்பதாக கூறினார்.
DINASUVADU.COM
Published by
Dinasuvadu desk

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

41 minutes ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

41 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

3 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

13 hours ago