கேரள போலீசுக்கு எச்சரிக்கை….கோர்ட் அதிரடி…!!
கேரளாவில் உள்ள சபரிமலையில் அய்யப்ப பக்தர்களிடம் கேரள போலீஸ் கடும் கெடுபிடிகள் செய்ததாக கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் , RSS , BJP போராட்டம் நடத்தி கேரள ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வன்முறையை ஏற்படுத்தினர்.இதனால் தற்போது பகதர்கள் பாதுகாப்பிற்க்காக கேரள காவல்துறை கடுமையான கெடுபிடியில் செய்து வருகிறது. பக்தர்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட BJP , RSS வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு, கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதியிடம் 144 தடை உத்தரவை மீறியதால், போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.ஆனால் நீதிபதிகள், போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் எந்த அதிகாரத்தின் கீழ், பக்தர்கள் சன்னிதானத்துக்குள் நுழைவதை போலீஸ் தடுக்கிறது? தரையில் தண்ணீரை ஊற்றி பக்தர்களுக்கு இடையூறு செய்யுமாறு யார் சொன்னது? இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார்.அதோடு மட்டுமில்லாமல் சபரிமலையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பட்டியலையும், அவர்களின் செயலையும் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் விவரத்தை டி.ஜி.பி. தெரிவிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. உண்மையான பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும்.என்று கூறி அடுத்தகட்ட விசாரணை, 23-ந் தேதி ஒத்திவைப்பதாக கூறினார்.

DINASUVADU.COM