கேரள சட்டசபையில் ஆளும் கட்சி எதிர்கட்சியிடையே காரசார சொற்போர்..!! காங்கிரஸ் தலைவர் ராகுலா..??அமித்ஷாவா..??பிரனாயி தடாலடி தாக்கு..!!
கேரளாவில் ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை மீண்டும் கூடிய நிலையில் அங்கு தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வரும் சபரிமலை விவகாரம் குறித்து இன்று கேரளச் சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவுக்கும் இடையே கடுமையான சொற்போர் நடைபெற்றது.
இன்று கேரளச் சட்டமன்றம் கூடிய நிலையில் சட்டமன்றத்தில் சர்ச்சையாகி வரும் சபரிமலை விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா வலியுறுத்தினார்.மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் வல்சன் தில்லங்கரி சபரிமலைக்கு இருமுடிக்கட்டு இல்லாமல் ஐயப்பன்கோவில் 18படியேறிச் சென்றதை மாநில அரசு அனுமதித்ததாகவும் சென்னித்தலா குற்றஞ்சாட்டினார்.
எதிர்கட்சிகளின் இந்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மாநில முதல்வர் பினராயி விஜயன் சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கேரளா முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது என்று சுட்டிக்காட்டினார். மேலும் பதிலளித்து பேசிய பிரனாயி எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலாவின் தலைவர் ராகுல்காந்தி இல்லை அமித்ஷா என்று குறிப்பிட்டு விமர்சித்தார்.இதனால் அவையில் பலத்த கூச்சல் குழப்பம் ஏற்பட்டது இதனையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.