கேரளா நிதி விவகாரம்:ரூ.700 கோடியை நீங்களே தாருங்கள் ,இல்லை அவர்களையாவது தர விடுங்கள்…!கேரள அரசு கோரிக்கை

Default Image

வெளிநாட்டு நிதியை இந்திய அரசாங்கம் வாங்க மறுப்பு தெரிவிப்பது குறித்து  கேரளாவின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கருத்து தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Image result for INDIA UAE FIGHT
ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண தொகை தருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.அதேபோல் தாய்லாந்தும் கேரளத்துக்குத் தங்கள் பங்குக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது.
இந்த இரண்டு வெளி நாட்டு நிதிகளையும் இந்திய அரசு வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றது.
மேலும் கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் வருத்தம் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும். வெளிநாட்டு நிதியை ஏற்கலாம் என 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் உள்ளது.எனவே 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம்.
Image result for kerala finance minister
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து கேரளாவின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி மத்திய அரசிடம்  கேட்டோம். ஆனால் அவர்கள் ரூ.600 கோடி மட்டுமே தந்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அளித்த ரூ.700 கோடி நிதியை ஏன் தடுக்க வேண்டும்.
தேசிய பேரிடர் நிர்வாகம் தொடர்பான அறிவிப்பு பகுதி-9-ல் தேசிய பேரிடர் ஏற்படும்போது வெளிநாடுகள் அளிக்கும் நிவாரண நிதிகளை அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.இப்போது ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க மறுத்தால் அதனை மத்திய அரசு எங்களுக்கு தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி,கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் உட்பட பலரும் நிதியை வாங்க வலியுறித்தி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்