கேரள மாநிலத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம் .
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகினர்.
மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அதேபோல் அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழை நின்று விட்டது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் மழையின் தாக்கம் மீண்டும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதேபோல் யெல்லோ அலர்ட் மீண்டும் விடப்பட்டுள்ளது.இது கனமழைக்கானா எச்சரிக்கை ஆகும்.
குறிப்பாக கேரளாவில் நாளை இடுக்கி, வயநாடு,பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு 2-ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் நாளை மறுநாள் இடுக்கி, திருச்சூர்,பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை நாளை மற்றும் நாளை மறுநாள் முறையே 64 புள்ளி 4 மில்லி மீட்டரில் இருந்து 124 புள்ளி 4 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…