கேரளாவை போல கையேந்த வைத்த மழை வெள்ளம்..!! எங்களுக்கும் உதவுங்கள் முதல்வர் வேண்டுகோள்.

Default Image

நாகலாந்து,

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது. சமீபத்தில் கேரளாவை மழை வெள்ளம் வேட்டையாடியது நாடறிந்ததே.இவ்வாண்டு இப்படி கன  மழை நாட்டின் பல்வேறு மாநிலங்களையும் விட்டு வைக்கவில்லை கடும் வெள்ளப் பெருக்கும்  , உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது..

இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக நாகாலாந்து மாநிலத்திலும் கனமழையால் பெய்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவும் , உயர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர், 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. நாகலாந்து மாநிலத்திற்கு அண்டை மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றது.

இந்த மழை பொழிவால் 400 கிராமங்களில் வசித்து வந்த 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.  நாகாலாந்து மாநிலத்திற்கு மத்திய அரசு உடடியான வெள்ள நிவாரண நிதியாக 219 கோடி நியுதவி அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி ரியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்-மந்திரி நெப்யூ ரியோ உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.கேராளவை தொடர்ந்து தற்போது நாகலாந்து மாநிலமும் இயற்க்கையின் பிடியில் சிக்கியுள்ளது..

 

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்