கேரளாவுக்கு 170 டன் நிவாரண பொருள்களுடன் வரும் எமிரேட்ஸ் விமானங்கள் :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் 12 கார்கோ விமானங்கள் மூலமாக, சுமார் 170 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் பலத்தை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 231பேர் மரணடைந்துள்ளனர். பலர் தங்களது வீடுகள் மாற்று உடைமைகளை இழந்துள்ளனர்.
மேலும் சுமார் 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தின் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பலரும் தங்களால் முடிந்த உதவிகளை கேரளாவிற்கு செய்யது வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ச்சில் பல்வேறு தொழில் நிறுவங்கள் அளித்த நன்கொடையால், சுமார் 170 டன் நிவாரணப் பொருட்கள் கேராளாவிற்கு திரட்டப்பட்டுள்ளன.
இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும், அரசுக்கு சொந்தமான எமிரேட்ஸ் விமானத்தின் ஸ்கை கார்கோ மூலம் கேரளாவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக எமிரேட்ஸ் விமான நிறுவனம், 12 கார்கோ விமானங்களை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.