இந்தியா வெளிநாடுகளின் நிதியை மறுப்பது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண தொகை தருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.அதேபோல் தாய்லாந்தும் கேரளத்துக்குத் தங்கள் பங்குக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது.
இந்த இரண்டு வெளி நாட்டு நிதிகளையும் இந்திய அரசு வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றது.
மேலும் கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும். வெளிநாட்டு நிதியை ஏற்கலாம் என 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் உள்ளது.எனவே 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம்.
மேலும் கேரளாவில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26இல் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெரும் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…