சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா விஎச்பியின் துணை அமைப்பான சூர்யா காயத்திரியில் சேர்ந்து அத்வைத வேதம் கற்றவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சங்பரிவாரால் திட்டமிடப்படும் வன்முறைக்கு பெண்களையே இரையாக்குவது அம்பலமாகி உள்ளது.
ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, கோவிலுக்குள் செல்ல சில பெண்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை மறைமுகமாக தொடுத்த சங்பரிவார் அமைப்புகளே தங்களது செல்வாக்கின் கீழ் உள்ள பெண்களை அனுப்பி கேரள இடது ஜனநாயக முன்னணிக்கு எதிரான பொய் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ரெஹானா சபரிமலை செல்ல பாஜகவினர் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ரெஹானா பலமுறை கேரள பாஜக பிரமுகர் சுரேந்திரன் என்பவரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெஹானா விவகாரத்தில் பாரதியஜனதா பின்புலம் இருப்பதாக குற்றம் சாட்டுப்பட்டு உள்ளது. இதை ரெஹானா பாத்திமா உறுப்பினராக உள்ள கிஸ் ஆஃப் லவ் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் ரெஹானா விசுவஇந்த பரிஷத்தின் துணை அமைப்பான சூர்ய காயத்திரி என்ற அமைப்பின் உறுப்பினர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பில் சேர்ந்து ரெஹானா அத்வைதம் குறித்து படித்து வந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு ரெஹானா இஸ்லாமிய மதத்தில் இருந்து விலகி இந்து மதத்திற்கு மாறியதாகவும், ஆனால் அவர் தனது பெயரை மாற்றவில்லை என்றும் ரெஹானா பல ஆண்டுகள் வேதபாடம் படித்து வந்ததாக அவரது கணவர் மனோஜ் கூறியுள்ளார்.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…