கேரளாவில் நேற்று இரவும் விடிய விடிய கனமழை…!பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு …!
கேரளாவில் நேற்று இரவும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கன மழை பெய்து வருகிறது.கோழிக்கோடு, எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, பாலக்காடு ,இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.கனமழையால் கொச்சி விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு இடுக்கி மாவட்டத்தில் விடியவிடிய மழை பெய்துள்ளதால் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றது.
DINASUVADU