Categories: இந்தியா

கேரளாவில்  நிஃபா உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி,10 பேர் உயிரிழப்பு!

Published by
Venu

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில்  நிஃபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி,10 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மத்திய சுகாதாரத்துறை குழு விரைந்துள்ளது.

நிஃபா வைரஸ் தாக்குதல் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று வகையை சேர்ந்ததாகும். பழந்தின்னி வவ்வால்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் 1998ஆம் ஆண்டில் மலேசியாவில் காம்புங் சுங்காய் நிஃபா என்ற ஊரில்தான் இந்த வைரஸ் தாக்குதல் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் நிஃபா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் பழந்தின்ன வவ்வால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது. பன்றிகள் உள்ளிட்ட பிற விலங்குகள் மூலமும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. வைரஸ் தாக்கினால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்படும். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து உன்னிப்பாகக் கண்காணித்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய உயிர்கொல்லியான நிஃபா வைரஸ் தாக்கி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. புனே ஆய்வகத்தில் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, நிஃபா வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இந்த வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து, மாநில அரசுக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரக் குழு கேரள மாநிலம் விரைந்துள்ளது.

வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் நோய் தாக்கிய பன்றிகள், வவ்வால்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதேபோல், மரங்களில் இருந்து விழுந்த பழங்களை உண்ணுவதையும், பதப்படுத்தப்படாத கள்ளை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்! 

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

13 minutes ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

1 hour ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

2 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

2 hours ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

2 hours ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

3 hours ago