முதல்வர் இல்லம் முன்பு போராட்டம்…கேரளாவில் தொடரும் பதற்றம்….!!
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மனைவிபோலீசார் பல்வேறு கெடுபிடிகள் காட்டுவதாக நேற்று இரவு சன்னிதானம் பகுதியில் தீடிர் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறியதாக பக்தர்களை சில தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள முதல் மந்திரி பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் கெடுபிடிகளை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக யுவ மோர்ச்சா மாநில தலைவர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com