Categories: இந்தியா

கேரளாவில் கனமழை! 53 பேர் பலி!மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி!

Published by
Venu

கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன்,கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்த  உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Image result for kerala heavy rain

கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் கோழிக்கோடு, வயலூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவால் உயிர் இழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

அப்போது இடிபாடுகளில் சிக்கி கிடந்த 1½ வயது குழந்தை ரிபா மரியம், அபினவ் (வயது 17) ஆகியோரின் உடல்களை நவீன கருவிகளின் உதவியுடன் மீட்பு குழுவினர் மீட்டனர். குழந்தை ரிபா மரியத்தின் தாய் உள்பட 6 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை கேரள மந்திரிகள் டி.பி. ராமகிருஷ்ணன், ஏ.கே.சசீந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், கேரள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சென்னிதலாவும் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

இதற்கிடையே கேரள கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன், 6 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும், மழை பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

8 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

9 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

12 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

13 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

13 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago