கேரளாவில் கனமழை எதிரொலி!45 பேர் பலி!
மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை கேரளாவில் 45 ஆக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியாளர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாடிய முதலமைச்சர் பினராய் விஜயன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.