கேரளாவில் கனமழை எதிரொலி …!இனி ஒரு வருடத்திற்கு எந்த நிகழ்ச்சிகளும் கிடையாது …!அனைத்தும் ரத்து …!கேரள அரசு அதிரடி
கேரள அரசு மழையால் ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்யும் வகையில் ஒரு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகினர்.
மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழை நின்று விட்ட்து.
இந்நிலையில் கேரள அரசு மழையால் ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்யும் வகையில் ஒரு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவில் ஒரு வருடத்திற்கு அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது .குறிப்பாக சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து என்று கேரள மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .