கேரளாவில் இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர் படுகொலை!மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்!
கேரள மாநிலம் கொச்சி மஹாராஜா கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர் படுகொலைக்கு எதிராக கேரள மாநில மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.
கேரள மாநில கல்வித் துறையில், மாணவர் அமைப்புகள் மிகவும் வலுவாக உள்ளன. பெரும்பாலும் இந்த அமைப்புகளில் அடிக்கடி சண்டை நிகழ்வுகளும் நிகழும். கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை வரவேற்பதற்காக மகாராஜா கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கேம்பஸ் பிரேண்ட் முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். கேம்பஸ் அமைப்பால் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களில், இந்திய மாணவர் சங்கத்தினர் அந்தப் பெயரை மதவாத கேம்பஸ் பிரேண்ட் என்று மாற்றியுள்ளது. அதன் விளைவாக, இந்திய மாணவர் சங்கத்தின் இடுக்கி மாவட்ட உறுப்பினரான அபிமன்யு (20) மற்றும் அர்ஜுன் (19) ஆகியோரை கேம்பஸ் பிரேண்ட் அமைப்பினர் கத்தியால் தாக்கினர்.
இவ்விபத்தில் அபிமன்யூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் . காயமடைந்த அர்ஜூனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அபிமன்யூ. இந்திய மாணவர் சங்கத்தின் விளம்பரங்களை சேதப்படுத்தியதால் கேம்பஸ் அமைப்பின் விளம்பரம் சேதப்படுத்தப்பட்டது என்று இந்திய மாணவர் சங்கம் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பாக, மூன்று பேரிடம் போலீசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 11 பேரை தேடிவருகின்றனர். இந்திய மாணவர் சங்க உறுப்பினர் அபிமன்யு கொலையை கண்டித்து கேரளா முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது.