கேரளாவிலும் MEETOO புயல்……முன்னாள் முதல்வரையும் விட்டுவைக்கவில்லை…..!!!புயலில் சிக்கிய காங்கிரஸ்…..!!!
இந்தியாவில் மையம் கொண்ட இந்த MEETOO புயல் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை தமிழகத்தை தொடர்ந்து இப்பொழுது கேரளாவையும் மையம் கொண்டுள்ளது இந்த புயல்.
கேரள நடிகை சரிதா நாயரிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்துக் கொண்டதாக கேரள முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் உமன் சாண்டி மீது கேரள போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான கிரிமினல் விசாரணை தொடங்கியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நடிகை சரிதா நாயர் யார் என்றால் சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர் தமது அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்ற அறிக்கையில் உம்மன் சாண்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கேரள அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த சோலார் பேனல் திட்டத்திற்காக முதலீடு திரட்டுவதற்கு அப்போதைய முதல்வர் உமன் சாண்டியை தாம் சந்திக்க சென்ற போது தமது தொழிலை வளர்ப்பதற்கு தம்மிடம் பாலியல் ரீதியான பிரதிபலனை எதிர்பார்த்ததாக சரிதா நாயர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவராஜன் கமிஷன், சரிதா நாயருடன் அரசியலில் பல முக்கியப் புள்ளிகளுக்கு பாலியல் தொடர்புகள் இருந்ததாக கடந்த ஆண்டு செப்டம்பரில் தாக்கல் செய்த ஆயிரத்து 73 பக்கம் கொண்ட அறிக்கையில் தெரிவித்தது.
நடிகை சரிதா நாயர் தமது புகாரில் குறிப்பிட்டிருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை செய்தது. முதலமைச்சர் பினராய் விஜயன் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2013ம் ஆண்டில் கைதான போது உமன் சாண்டி மீது சரிதா நாயர் கூறியிருந்த குற்றச்சாட்டை கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
அதே நிலையில் மீண்டும் 2017ம் ஆண்டில் சரிதா நாயர் -உமன் சாண்டி கேரள காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் மீதும் மீண்டும் காவல்துறையிடம் புகார் அளித்தார். மாவட்ட நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலமும் கொடுத்தார்.
இந்த புகார்கள் கேரள அரசியலில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக சோலார் பேனல் மோசடியில் ஈடுபட்ட சரிதா நாயரிடம் பாலியல் ரீதியாக பிரதிபலன்களை பெற்றதாக உமன் சாண்டி மீது போலீசார் முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.இதனால் கேரளாவையும் விட்டுவைக்கவில்லை இந்த மீடு புயல்.
DINASUVADU