கேரளா:இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறப்பு…!!11 மாவட்டங்கள் பாதிப்பு..!
ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை நிரம்பியதை அடுத்து 5 மதகுகளும் திறக்கப்பட்டு விட்டன. விநாடிக்கு ஏழு லட்சம் லிட்டர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் வயநாடு,பாலக்காடு உள்ளிட்ட 11 மாவட்ட தாழ்வான கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கின்றன.
இடுக்கி அணை மற்றும் இடமலையாறு அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் எர்ணாகுளம் வழியாக ஓடும் பரதப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளச் சேதத்தைப் பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை கேரளா செல்கிறார், கேரள மக்களுக்கும் அரசுக்கும் வேண்டிய உதவிகள் செய்யத் தயார் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பார்ப்பதற்கு ரம்மியமாய் காட்சி தரும் இந்த அணை 1973 ல் கட்டப்பட்டது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 2ஆயிரத்து 403 அடி உயரம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன்இணைந்திருங்கள்