கேரளவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்:பழந்தின்னி வௌவால்களால்..! பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தகவல்..!!
கேரள மக்களை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ், பழந்தின்னி வௌவால்கள் மூலம் பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு, அந்தப் பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.
கோழிக்கோடு மாவட்டத்தில் மூசா என்பவருக்குச் சொந்தான கிணற்றில் இருந்த வௌவால்கள் மூலம்தான் நிபா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்குள்ள 21 வௌவால்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, புனேவில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்மூலம், முதற்கட்ட ஆய்வில் பழந்தின்னி வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, மருத்துவர்கள், செவிலியர்கள் விடுமுறையின்றி பணியாற்ற வேண்டும் என கோழிக்கோடு அரசு மருத்துவமனை டீன் அறிவுறுத்தியுள்ளார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தவிர, மற்றவர்களை உடனடியாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவதற்கான பணிகளும் அங்கு தொடங்கியுள்ளன.
நிபா வைரஸின் அச்சத்தால் சர்வதேச சந்தையில் இந்திய பழங்களின் மதிப்பு பெருமளவு குறைந்து விட்டதாகவும், நோய் பரவுவதை தடுக்க பல நாடுகள் இந்திய பழங்களுக்கு தடைவிதித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்