பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இன்று ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி,ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில்,40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து,புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.அவ்வாறு,நடந்த வான்வழித் தாக்குதலின் போது பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.ஆனால்,அதன்பின்னர்,அவரது விமானம் எதிரிப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு,பாராசூட் மூலம் உயிர் தப்பிய அவர் பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தால் அவர் சிறைபிடிக்கப்பட்டார். அபிநந்தன் அப்போது விங் கமாண்டராக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு,அபிநந்தன் அவர்களை பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.இதன்மூலம் மக்கள் மத்தியில் அபிநந்தன் மிகவும் பிரபலமானார்.இதனைத் தொடர்ந்து,அபிநந்தன் அவர்களுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில்,பிப்ரவரி 27, 2019 அன்று வான்வழிப் போரின் போது பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…