கூகுள் மேப் இனி ஆட்டோ பயண வழிகாட்டியையும் இணைத்தது கூகுள்..!!!
கூகுள் மேப்பில் டெல்லி பொதுப் போக்குவரத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆட்டோவையும் கூகுள் இன்று முதல் இணைந்துள்ளது.
தற்பொழுது கூகுள் மேப் பயன்படுத்தி ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கு வழி தேடுகின்ற பயனாளர்களுக்காகவே ஏற்கெனவே விமானம், ரயில் மற்றும் பேருந்து, வாடகைக்கார் என்றவழித்தடமும் அவற்றிக்கு ஆகின்ற சராசரி கட்டணம் மற்றும் நேர அட்டவணை போன்றவை இடம் பெற்றிருக்கும்.
இந்நிலையில் புதிதாக பயணிப்போருக்கு ஆட்டோ கட்டணமானது அதிகமாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் கூகுள் மேப் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக டெல்லியில் மட்டும் பொதுப் போக்குவரத்துகென்று சில வாய்ப்புகளுக்கான ஒரு பட்டியலில் ஆட்டோ ரிக்ஷாக்களையும் இணைத்துள்ளது.
இதில் அவற்றின் சரியான வழித்தடம் மற்றும் கட்டணம் போன்றவற்றை கூகுள் டெல்லி போக்குவரத்துக் காவல்துறையிடம் பெற்று அதன்படியே பயணிகளுக்கு இது வழிகாட்ட உதவுகிறது. இந்த மாதியானவை சேவைகள் பிற முக்கிய நகரங்களிலும் விரைவில் அமலுக்கு வருகிறது என்று கூகுள் தெரிவித்துள்ளது.