பீகாரில் சீதாமர்ஹி மாவட்டத்தில் சடார் பகுதியில் வசித்து வருபவர் பகவான் லால் முக்யா. இவரது மனைவி சரிதா தேவி (வயது 36). பகவானின் சகோதரர்கள் சுனில் முக்யா மற்றும் வீர முக்யா.
இந்த நிலையில் சுனில் மற்றும் வீர முக்யா தங்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்காத நிலையில் வினோத் என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர்.
அந்த மந்திரவாதி, சரிதா தேவியை ஒரு சூனியக்காரி என கூறியதுடன், அவரை கடவுளுக்கு பலி கொடுத்து விட்டால் உங்களுக்கு குழந்தை பிறக்கும் விருப்பம் நிறைவேறும் என கூறியுள்ளான்.
இதனை அடுத்து சரிதா தேவியை சகோதரர்களான சுனில் மற்றும் வீர முக்யா பலி கொடுத்துள்ளனர். இதுபற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சகோதரர்கள் மற்றும் வீர முக்யாவின் மனைவி இந்திராசன் தேவி ஆகிய 3 பேரும் இந்த கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.
அவர்களை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மந்திரவாதி வினோத் மற்றும் அவனது 3 கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
DINASUVADU