குழந்தை கடத்த வந்ததாகக் கருதி மாற்றுத் திறனாளிக்கு அடி..!
சத்தீஷ்கர் மாநிலத்தில் குழந்தை கடத்த வந்ததாகக் கருதி மாற்றுத் திறனாளி ஒருவரை கட்டி வைத்து அடித்துக் கொடுமைப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜக்தல்பூர் பகுதியில், கடந்த ஒன்றாம் தேதி வாட்ஸ் ஆப்-ல் பரவிய வதந்தியை நம்பி, குழந்தை கடத்த வந்ததாகக் கருதி காது கேளாத மாற்றுத் திறனாளி ஒருவரை இளைஞர்கள் சிலர் பிடித்தனர்.
அவரைக் கட்டி வைத்து அடித்துக் கொடுமைப்படுத்தியதை அங்கிருந்தவர்கள் படம் பிடித்தனர். இதுகுறித்து ஜக்தல்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.