குற்றவாளிகளைச் சந்திப்பதில் இருந்து அரசியல்வாதிகளைத் தடுக்க விசாரணை வேண்டாம்.!காஷ்மீரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை!
குற்றவாளிகளைச் சந்திப்பதில் இருந்து அரசியல்வாதிகளைத் தடுக்கவும், வழக்கை மாற்றும் வரை எந்த விசாரணையும்வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறினார்.
இதே போல் இன்று , ஜம்மு காஷ்மீரில் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்குகிறது.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவன் 18 வயது நிரம்பாதவன் என்பதால் அவன் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கை வாதாட ஜம்மு காஷ்மீர் அரசு இரண்டு மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.
இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் மீதான பலாக்காரத்தைக் கண்டித்து, பாலிவுட்டின் நட்சத்திரங்களும் திரண்டு மும்பையில் பேரணி நடத்தினர்.
சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி, மும்பை ,திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் குற்றவாளிகளைச் சந்திப்பதில் இருந்து அரசியல்வாதிகளைத் தடுக்கவும், வழக்கை மாற்றும் வரை எந்த விசாரணையும்வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறினார். உச்சநீதிமன்றம் தனது மனு மீது தீர்ப்பு வழங்கும் வரை காத்துவா நீதிபதி இந்த வழக்கைவிசாரணை செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.வன்கொடுமை வழக்கை கத்துவாவிலிருந்து சண்டிகருக்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.