Categories: இந்தியா

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து நிதின் கட்காரியை சந்தித்து பேச முடிவு : குமாரசாமி ..!

Published by
Dinasuvadu desk

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள முதல்-மந்திரி குமாரசாமி, அங்கு வைத்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வந்துள்ளேன். காவிரி நதிநீர் பிரச்சினையை கையாள காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தால் கர்நாடக மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன்.

அதற்கான நேரம் ஒதுக்கும்படி அவரிடம் கேட்டு இருந்தேன். அவரும் நாளை(இன்று) மதியம் 12.30 மணிக்கு சந்தித்து பேச நேரம் கொடுத்துள்ளார். அவரிடம் காவிரி நதிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம் குறித்து பேச உள்ளேன். அதுபோல, காவரி நதிநீர் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசவும் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளேன்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கூட்டணி ஆட்சியில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய அவசியம் இல்லை, துணை பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். பொதுவாக தேர்தலுக்கு பின்பு புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். துணை பட்ஜெட் தாக்கல் செய்தால் மக்களுக்கான திட்டங்கள் குறித்து எதுவும் அறிவிக்க முடியாது. பட்ஜெட்டில் தான் மக்களுக்கான நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடியும்.

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசிக்கப்படலாம். அதுபற்றி எனது கவனத்திற்கு வரவில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசவும் தீர்மானித்துள்ளேன். ஒரு வேளை நேரம் கிடைத்தால் அவரை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசுவேன். கவுரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருவதுடன், ஒரு சிலரை கைது செய்துள்ளனர். விசாரணை இன்னும் முடிவடையவில்லை. விசாரணை முழுமையாக முடிந்தால் தான் கொலைக்கான காரணம், அதற்கு பின்னால் யார் உள்ளனர் என்பது தெரியவரும்.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடைபெறும். பத்திரிகையாளர்களான நீங்கள்(நிருபர்கள்) தான் இந்த ஆட்சி நீடிக்குமா? என்று அடிக்கடி கேட்டு வருகிறீர்கள். உங்களை திருப்திப்படுத்தவே நாடாளுமன்ற தேர்தல் வரை கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினேன். அதனால் கூட்டணி ஆட்சி நிலைக்குமா? என்று பத்திரிகையாளர்கள் கவலைப்பட வேண்டாம்.

மராட்டிய மாநிலத்தில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதுபோல, கர்நாடகத்திலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி நிலையான ஆட்சியை கொடுக்கும்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago