குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

Default Image

குமாரசாமி பதவியேற்பு விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என அறிவிப்பு.

வரும் புதன்கிழமை பகல் 12 முதல் 2 மணிக்குள் கண்டிரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இன்று  ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 -ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார்.இதேபோல் 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி,  பதவியேற்பு விழாவுக்கு சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த பதவியேற்பு விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்