கர்நாடக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்ட குமாரசாமி, சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான சவுதா வளாகத்தில், நேற்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடகாவின் முதலமைச்சராக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் HD குமாரசாமிக்கு, ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து துணை முதல் அமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தவிர, லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் அனைத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்.எல்.ஏக்களும் பாதுகாப்பாக ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சட்டப்பேரவையில் குமாரசாமி பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வரை எம்.எல்.ஏக்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள்.
கர்நாடக சட்டப்பேரவை நாளை மதியம் 12.15 மணிக்குக் கூடுகிறது. அப்போது, குமாரசாமி தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டுவர உள்ளார். இதன்மீது விவாதம் நடத்தப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.
பா.ஜ.க.வுக்கு 104 இடங்களும், காங்கிரசுக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 37 இடங்களும் உள்ளன. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி அரசின் பலம் 118 ஆக இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமியை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…