குப்பைகளை அகற்றும் பணியில்!இந்திய சுற்று சூழல் அறக்கட்டளை அமைப்பினர்!
ஜூன் 5 உலக சுற்று சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனியாக பிரித்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் தேதி உலக சுற்று சூழல் தினமாக ஐ.நா சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுசூழலை பாதுகாக்க தவறியதன் விளைவை இன்றைய தினம் மனித குலம் சந்தித்து வருகிறது. ரசாயனக் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் என பல்வேறு காரணிகளால் சுற்றுச் சூழல் மாசடைகிறது.
நகரப்பகுதிகளில் குவியும் குப்பைகளும், கழிவுகளும் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன.
எனவே உலக சுற்று சூழல் தினத்தை யொட்டி இன்று 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏறி குளம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பிளாஷ்டிக் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இந்திய சுற்று சூழல் அறக்கட்டளை அமைப்பினர்.நாளைய தினம் இரண்டே இரண்டு மணி நேரம் ஒதுக்குங்களேன் என அழைக்கிறார்கள் அதன் உறுப்பினர்கள்
ஏரிப்பகுதிகள்,குளக்கரைகள் கடலோர பகுதிகள் முதலான இடங்கள் உள்ள குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட உள்ளனர்.