குண்டு வைத்து கொலை செய்த கொடூரர்களுக்கு தூக்கு…!!!
இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கே குண்டு வைக்கும் கயவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 44 பேர் கொல்லப்பட்டதுடன், 68 பேர் காயமடைந்தனர்.
11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளிகள் அனீக் சயீத் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகியோருக்கு தூக்குதண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றொரு குற்றவாளியான அன்ஜூமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 2 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், 3 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர்.