குண்டு துளைக்காத உடைகள் ராணுவ வீரர்களுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து…!
குண்டு துளைக்காத உடை ராணுவ வீரர்களுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கள சோதனைகளில் தயாரிப்பு நிறுவனங்கள் தோல்வியடைந்ததால், குண்டு துளைக்காத உடைகளை வழங்கும் திட்டம், கடந்த 9 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், டெல்லியை சேர்ந்த SMPP பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 639 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் ஒரு லட்சத்து 86 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகள் தயாரிக்கப்பட உள்ளன. அடுத்த மூன்று மாதங்களில் இருந்து, உடைகளை SMPP நிறுவனம் தயாரித்து தொடர்ந்து வழங்க உள்ளது. நவீன ரக தோட்டக்களால் கூட துளைக்க முடியாத வகையிலும், எந்த திசையில் இருந்து சுட்டாலும் பாதுகாக்கும் விதமாக உடைகள் தயாரிக்கப்பட உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.