குட்நியூஸ்…பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டத்துக்கு ரூ .1.31 கோடி ஒப்புதல் – மத்திய அரசு அறிவிப்பு..!

Default Image

பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு(ஊட்டச்சத்து) மத்திய அரசு ரூ .1.31 கோடி ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 11.2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் PM-POSHAN திட்டத்தை தொடங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் மற்றும் இத்திட்டத்திற்காக சுமார் ரூ.1.31 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.பிஎம் -போஷன் (PM POSHAN) திட்டம் பள்ளிகளில் தற்போதுள்ள மதிய உணவு திட்டத்தை உட்படுத்தும். இத்திட்டம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படும்.இருப்பினும், மத்திய அரசு முக்கிய பங்களிப்பாளராக இருக்கும்.

மதிய உணவு திட்டம் மறுபெயரிடப்பட்டது:

பள்ளிகளில் மதிய உணவுக்கான தேசிய திட்டம் ‘பள்ளிகளில் பிஎம் -போஷன்(PM POSHAN) தேசிய திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் நாடு முழுவதும் 11.20 லட்சம் பள்ளிகளில் படிக்கும் 11.80 கோடி மாணவர்களை உள்ளடக்கும்.

இதற்காக,மத்திய அரசிடம் இருந்து ரூ .54 ஆயிரம் கோடி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ரூ .31,733.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,உணவு தானியங்களுக்காக ரூ .45,000 கோடி கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்கும்.

மேலும்,மத்திய அமைச்சகம் ‘திதிபொஜன்’ என்ற கருத்தை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.அந்த வகையில்,குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் தோட்டக்கலை பற்றிய அனுபவத்தை வழங்குவதற்காக பள்ளிகளில் பள்ளி ஊட்டச்சத்து திட்டங்களை அரசாங்கம் ஊக்குவிக்கும்.

அதுமட்டுமல்லாமல்,இரத்த சோகை அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு உதவும் என்று கூறப்படுகிறது.இதற்காக,ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்