ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் சிந்தூர்பங்க் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கும்பர். இவரது மனைவி சஞ்சிதா சவுத்ரி (வயது 18). கடந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடந்தது. பல மாதங்கள் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கணவர் கொடுமைப்படுத்துகிறார் என கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு மனைவி சென்று விட்டார்.
இந்நிலையில், பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி குடும்ப நீதிமன்றத்தில் ரமேஷ் முறையிட்டுள்ளார்.
இதில் ஆஜராக ரமேஷின் மனைவி சஞ்சிதா மற்றும் மனைவியின் பெற்றோர் வந்துள்ளனர். ஆனால் முன்பே திட்டமிட்டிருந்த ரமேஷ் அவர்களை வாள் ஒன்றால் வெட்ட முயன்றுள்ளார். இதில் சஞ்சிதாவின் தந்தை சுதன் அறை ஒன்றிற்குள் ஒளிந்து கொண்டு தப்பினார்.
ரமேஷின் தாக்குதலுக்குள்ளான சஞ்சிதா, அவரது தாயார் மற்றும் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சஞ்சிதா உயிரிழந்து விட்டார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…