குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜா, தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி, யோகா பயிற்சியாளர் நானாம்மாள் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில், பத்ம விருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இசைஞானி இளையராஜாவுக்கு, குடியரசு தலைவர் பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த உஸ்தாத் இசைக்கலைஞர் உஸ்தாத் குலாம் முஸ்தஃபாகானுக்கும், கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், கல்வியாளருமான பரமேஸ்வரனுக்கும், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் முதல் தொல்லியல் துறை இயக்குநரும், கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞருமான ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 98 வயதான மிக மூத்த யோகா பயிற்சியாளரான நானாம்மாளுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவம் சேர்த்தார்.
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க வழிகாட்டிய, மதுரை தியாகராய கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு குடியரசு தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ் வர்மன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…