குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைசேர்ந்த 17 வயது சிறுமி, பாஜக எம்எல்ஏ உள்ளிட்டோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன் படி 12 வயதுக்கு உட்பட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். 12 வயதிற்கு மேற்பட்ட16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கான சிறை தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கவும், ஆயுள் முழுக்க சிறை தண்டனை வரை நீட்டிக்கவும் அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதினாறு வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்குவோர் முன்ஜாமீன் கோர முடியாது. மகளிருக்கு எதிராக பாலியல் கொடுமையில் ஈடுபடுவோருக்கு தண்டனை 7 ஆண்டில் இருந்து பத்தாண்டுகளாக அதிகரிப்படுகிறது. இந்த வழக்குகளில் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது விதிக்கப்படும்.
16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பலாத்காரம் செய்தால் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.மேலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை ஏற்படுத்தவும், இந்த நீதிமன்றங்களில் வழக்குகளை இரண்டு மாதங்களில் முடிக்கவும் அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள போக்சோ சட்டத்தில் இதற்கான திருத்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதே போன்று வங்கி மோசடிகளை தடுக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் உள்நாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்தவற்கான மசோதா கடந்த மாதம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகள் அமளியால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், வங்கி மோசடிகளைத் தடுக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் நாடு திரும்பி விசாரணையை எதிர்கொள்வதற்கான அழுத்தம் ஏற்படுவதுடன், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும் GFX 2 OUT என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…