குடித்து விட்டு வண்டி ஓட்டினால் 7 ஆண்டு சிறை : மத்திய அரசு
குடித்துவிட்டு வண்டி ஒட்டினால் டிரன்க் அண்ட் டிரைவ் என வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும். அப்படி இருந்தும் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. இதனால் அரசு சட்டத்தை மேலும் வலுபடுத்தி உள்ளது.
அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால், வண்டி ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்க பட்டுள்ளது. விபத்துகளினால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்த சட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் காப்பீட்டுத் தொகையை சரியாக பின்பற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
source : dinasuvadu.com