குஜராத் மாநிலத்தில், 2002-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்-பரிவாரங்கள் நடத்திய மதவெறியாட்டத்தை, அப்போதைய மோடி தலைமையிலான மாநில அரசு வேடிக்கை பார்த்ததாக இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற துணைத்தளபதி ஜெனரல் சமீர் உதீன் ஷா கூறியுள்ளார்.
அரசு மட்டும் உதவியிருந்தால் குறைந்தபட்சம் 300 பேர்களின் உயிர்களையாவது காப்பாற்றி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குஜராத் வன்முறையைத் தடுக்கும் பணியில் 2002-இல் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. இந்த படைக்கு தலைமை வகித்தவர்தான் ஜெனரல் சமீர் உதீன் ஷா. பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், ‘தி சர்க்காரி முசல்மான்’ என்ற சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த சுயசரிதையிலேயே, குஜராத் வன்முறையின்போது நடந்த சம்பவங்களை ஜெனரல் ஷா விவரித்துள்ளார். மேலும், என்டிடிவி-க்கு நேர்காணல் ஒன்றையும் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே, போக்குவரத்து வசதிகள் குறித்துத்தான் கேட்டேன். அதற்கு மாநில அரசு அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை. அரசு நிர்வாகமே மெத்தனமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் உடனடியாக, அப்போதைய முதல்வர் மோடியின் இல்லத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினேன். மோடியின் இல்லத்தில் அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். நான் மோடியிடம், எங்களக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகள் பற்றியும் தெரிவித்து விட்டு வந்தேன்.
ஆனால், அடுத்த நாள் நான் அங்கு சென்றபோது, நாங்கள் வன்முறைப் பகுதிகளுக்குச் செல்வதற்கு எந்தப் போக்குவரத்தும் இல்லை. உடனே குஜராத் மாநில அரசின் தலைமை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தோம். அப்போதும், அவர்கள் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யவில்லை. நாங்கள் ஒருநாள் முழுவதும் விமான நிலையத்தில் ராணுவத் துருப்புகளுடன் காத்திருந்தோம்.
அப்போதும் கூட, வன்முறை நடந்த இடங்களில் மாநில காவல்துறையினர் செயல்பாடுகள் எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தன. சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளை கலவரக்காரர்கள் சூழ்ந்து கொண்டிருந்த நிலையில், அவர்களை அங்கிருந்த விரட்டியடிக்க காவல்துறை எந்த முயற்சியும் செய்யவில்லை. இது மாநில அரசே மக்களைப் பிரித்தாள்வது போன்றுதான் எனக்குத் தோன்றியது.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…