குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கூரோத பேச்சு…!
“ராமர் கோயிலா அல்லது மசூதியா – எது உங்களுக்கு வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்” – குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி இப்போது மேடைக்கு மேடை முழங்குவது.
பல மதத்தவர்கள் வாழும் ஒரு நாட்டின் பிரதம மந்திரி மதச்சார்பற்றவராக இருக்கவேண்டும் – அல்லது அப்படியாவது வெளியே காட்டிக் கொள்ளவேண்டும். ஆனால் இவர் இப்படி வெளிப்படையாகவே தான் ஒரு இந்துத்துவ வாதிதான் என்று பறை சாற்றுகிறார்.இந்திய அரசியலமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே இவரெல்லாம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது அவருக்கு செய்யும் அவமானம்.