குஜராத் அருகே கடலில் பரபரப்பு….2 சரக்கு கப்பல்கள் மோதல்!

Default Image

குஜராத்தின்,கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று இரவு 2 சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டுள்ளதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு.

குஜராத்தின்,கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று(நவம்பர் 26) இரவு  எம்விஎஸ் ஏவியேட்டர் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ்(MVs Aviator & Atlantic Grace) என்ற இரண்டு கப்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

ஆனால்,நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமும் இல்லை,ஆனால்,கப்பலைச் சுற்றி எண்ணெய் படலம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து,இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்களானது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

மேலும்,அதிகாரபூர்வ அறிக்கையின்படி, “இந்திய கடலோர காவல்படை கப்பல்கள்,ஹெலிகாப்டர் ஆகியவை விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டது.எண்ணெய் கசிவு அல்லது இரண்டு வணிக கப்பல்களில் இருந்து எந்தவித கடல் மாசுபாடும் இல்லை என்றும்,அந்த பகுதியில் உள்ள  தொடர்ந்து  கண்காணிக்கப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்