குஜராத்த்தில் பாஜகவின் வெற்றி; வெற்றியல்ல…!
2012ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 தொகுதிகளிலும்
காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
ஆனால் இந்த ஆண்டு நடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 தொகுதிகளிலும்
காங்கிரஸ் 79 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால் பிஜேபியின் ஓட்டு சதவீதமானது 15% சரிவு நோக்கி சென்றுள்ளது. அதேபோல் சட்டமன்ற இடங்களும் சுமார் 18 இடங்களை காங்கிரஸ் மற்றும் இதர காட்சிகளுக்கு தரைவார்த்துள்ளது.
குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி பெருமையோடு வெற்றிக்காக கொண்டாட ஒன்றும் இல்லை. தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டதற்காக வேண்டுமானால் கொண்டாடலாம்.உண்மையான வளர்ச்சி யாருக்கு? மக்களின் நம்பிக்கை யார் மேல அதிகமாயிருக்கு?