கிறிஸ்துமஸ் பண்டிகை – மாநிலங்களவை 5 நாட்கள் விடுமுறை …!!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மாநிலங்களவைக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25-ம் தேதி மாநிலங்களவைக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிசம்பர் 24 மற்றும் மறுநாளான டிசம்பர் 26 ஆம் தேதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலங்களவைக்கு சனி, ஞாயிறை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.