கிரண்பேடி மீதான வழக்கு ஒத்திவைப்பு..
புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் கிரண்பேடி.இவர் தனது அரசியலமைப்பு சட்டத்தையும், பதவிப் பிரமாண விதிகளையும் மீறி செயல்படுகிறார்.ஆகையால் அவரைதிரும்ப பெற கோரி புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கானது இன்று நீதிபதிகளின் முன்பு விசாரணைக்கு வந்தது.டெல்லி ஆளுநர் வழக்கில் பிறப்பித்த உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என முருகன் தரப்பில் கூறப்பட்டது.
துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டபோது மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டுத்த மாதம் 23-ஆம் தேதிக்குள் மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.