காஷ்மீர் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை..!! இந்திய நிலைகள் மீது பா.க் தாக்குதல்..!!
பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை மீண்டும் ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று பாகிஸ்தான் படைகள் இந்திய கிராமங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தின. பீரங்கி குண்டுகளும் வீசப்பட்டதால் கிராமவாசிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்தியப் படைகள் திருப்பித் தாக்கியதில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். தொடர்ந்து இன்று பத்தாவது நாளாக பாகிஸ்தான் படைகள் தாக்குதல் தொடுத்து வருவதால் எல்லையில் பதற்றமான நிலை நீடிக்கிறது. எல்லையோர கிராமங்களில் இருந்து சுமார் 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.